வாக்குகள் எண்ணும் மேஜையை குறைக்கக்கூடாது: கே.பாலகிருஷ்ணன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள செய்தி: மே 2ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது எனவும், இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுக்கு எழுதிய கடிதத்தை இன்று (21ம் தேதி) கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், வெ.ராஜசேகரன் ஆகியோர் நேரில் சந்தித்து கொடுத்தனர்.

அத்துடன் மே தின கொடியேற்று விழா நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி தடை விதிக்கக்கூடாது தலைமை தேர்தல் அதிகாரியிடம் கடிதம் மூலம் வற்புறுத்தப்பட்டது.

0
Spread the love
wpChatIcon