கோடையை குளிர்ச்சியாக்கும் பதநீர்!

கோடைக் காலத்தில் பதநீர் மற்றும் நுங்கு அதிக அளவில் கிடைக்கும். இரண்டுமே உடல் மற்றும் வயிற்றுப் பகுதியை குளிர்ச்சியாக்கும் என்பதால், சாலையோரங்களில் இதனை விற்பனை செய்வதை பார்க்கலாம். மருத்துவக் குணம் கொண்ட இந்த பதநீரால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்

*பதநீர் சர்க்கரை சத்து நிறைந்தது என்பதால் கோடையினால் ஏற்படும் சோர்வினை நீக்கும்.

*உடலுக்கு குளிர்ச்சி தரும்.

*கழிவு அகற்றியாகவும், வியர்வை அகற்றியாகவும் செயல்படும்.

*இதனுடன் சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது.

*எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

*ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம்.

*உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த டானிக்.

*வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.

*பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்து புளிக்க வைத்து, ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவி வந்தால் சீக்கிரம் குணமாகும்.

0
Spread the love
wpChatIcon