ராஜஸ்தானுடன் இன்று மோதல்: வெற்றியை தொடரும் முனைப்பில் கோஹ்லி படை..!

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 16வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி சென்னையில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் பார்மில் உள்ளது. தொடக்கத்தில் தேவ்தத் படிக்கல், கோஹ்லி நிதானமாக தொடங்கினாலும், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் மிடில் ஆர்டரில் அதிரடியில் மிரட்டுகின்றனர். பந்துவீச்சில் ஹர்சல் பட்டேல் 9 விக்கெட் எடுத்து டாப்பில் உள்ளார். முகமது சிராஜ் , சாஹல், வாஷிங்டன் வலு சேர்க்கின்றனர்.

இன்று வெற்றி பெற்று மீண்டும் முதலிடம் பிடிக்கும் முனைப்பில் களம் காண்கிறது. மறுபுறம் ராஜஸ்தான், 3 போட்டியில் ஆடி 1ல் வெற்றி (டெல்லிக்கு எதிராக), 2ல் தோல்வி(பஞ்சாப், சென்னைக்கு எதிராக) கண்டுள்ளது. கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லர் ஆகியோரை தான் பேட்டிங்கில் பெரும் நம்பி உள்ளது. டேவிட்மில்லர், கிறிஸ் மோரீஸ் கைகொடுத்தால் தான் வெற்றிபெற முடியும். பந்து வீச்சில் சேத்தன் சகாரியா மட்டும் தான் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். ஆர்ச்சர் இல்லாதது பெரும் பின்னடைவுதான். இன்று பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு ராஜஸ்தான் தடைபோடுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

0
Spread the love
wpChatIcon