திருமா மீது சாதிய வன்மத்தை கொட்டிய மலேசிய தமிழர்கள்!

மலேசியா சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் சாதியையும் தீண்டாமையையும் சனாதன முட்டாள்தனங்கள் மூட நம்பிக்கைகளையும் நூறாண்டுகளுக்கும் முன்பாகவே அங்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.

அவர்களுக்கு திராவிட இயக்கம் கொண்டுவந்த சுயமரியாதை பகுத்தறிவு கொள்கைகளைப் பற்றி பரவலான அறிமுகம் கிடையாது.

பெரும்பாலும் சீனர்களுடன் மலேய மக்களுடன் போட்டி போட்டு வாழவேண்டிய தேவை இருந்ததால் இந்து மதத்தை தங்கள் பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் பயன்படுத்திக் கொண்டனர்.

இவர்களிடம் சென்று இந்து மதத்தில் பாப்கார்ன்களின் சூழ்ச்சிகளைப் பற்றி பேச முடியாது.மதவாதம் இனவாதம் குறித்தும் பேச முடியாது காரணம்.அது அவர்களுக்கு வசதியான வாழ்க்கை முறையாக இருக்கிறது.கூடவே ஜாதி அவர்கள் மனதில் ஆழமாக ஊடுருவியிருக்கிறது.

அங்கு வாழும் தமிழ்ர்களைபாப்கார்ன்கள் மிக எளிதாக தங்கள் கைப்பாவையாக்கி கொண்டு 100 ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் எப்படி உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்தார்களோ அப்படியே அங்கே சமகாலத்தில் வாழ்கிறார்கள்.

அவர்கள் என்ன சொன்னாலும் குனிந்து வணங்கி வாய் பொத்தி கேட்டுக் கொள்ள அங்கு வாழும் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.

அங்கு இருக்கும் தமிழ்ச்சங்கம் தமிழ் கலை இலக்கியம் பண்பாடு என எல்லாவற்றிலும் பாப்கார்ன் ஆதிக்கமே அதிகமிருக்கும்.அதற்கு நிகராக அல்லது அடுத்த இடத்தில் வெள்ளாள….ளை..மார்களின் ஆதிக்கம் இருக்கும்.

இரண்டு நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தால்கூட அவர்களாகவே தங்கள் சாதியை வெட்கமின்றி சொல்லக்கூடிய மனிதர்கள் அங்கு உண்டு.

கிட்டத்தட்ட இதே நிலை இலங்கையிலும் உண்டு.

இந்த இருநாடுகளிலும் (சிங்கை மலேசியா) இவர்கள் வெறுப்பை கக்கும் ஆட்கள் யாரென்றால் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடந்த 20-30 ஆண்டுகளில் வேலைக்காக சென்று அங்கு கஷ்டப்படுபவர்களே ஆவர்.அவர்களை “ஊர்காரன்” என்பார்கள்.இவர்களும் நிறைய ஏமாற்று வேலைகளை துரோகங்களை செய்துதான் அந்த அவப் பெயரை சம்பாதித்திருக்கிறார்கள் என்பது வேறு கதை.

இலங்கையிலும் சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இதே நிலை இருந்தது. அவர்களை கள்ளத்தோணி என்றே இலங்கை தமிழர்கள் அழைத்தார்கள்.அங்கு தோட்ட வேலைக்குச் சென்ற மலையக மக்களை சுதந்திரத்திற்கு பிறகு மொத்தமாக வெளியேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை சட்டமாக்கி சுமார் 6 லட்சம் பேரை தமிழ்நாட்டுக்கு துரத்தியவர்கள் அன்றைய இலங்கை தமிழர்கள்.என்பதை பலர் இன்று மறந்து விட்டார்கள்.

இந்த வரலாறு இப்போது.. ஏன்..?

மலேசியாவுக்கு சென்ன விசிக தலைவர் திருமா அங்கு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த கோது அங்கிருந்த தமிழர்களில் சிலர் “டேய் நிப்பாட்றா..!!” என்று சொன்னதோடு..

அதன் பின் பேசிய ஒரு நபர்..உங்க ஏர் குப்பைகளை கொண்டு வந்து இங்கே கொட்டாதீர்கள் என்று அபிசியலாகவே அகங்காரத்துடன் பேசியிருக்கிறார்.

இரண்டு பேச்சிலும் வெளிப்பட்டிருப்பது..

அப்பட்டமான சாதியம்…அருவருக்கத் தக்க ஆழ்மன அழுக்கு.

இந்த அநாகரிகம் நிகழ்ந்ததற்கான காரணங்கள்தான் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் செய்திகள்.

கதிர் ஆர் எஸ்
24/06/23

+1
Spread the love
wpChatIcon